Tuesday, September 24, 2019

இன்று 07/09/19 நம் பள்ளியில் முப்பெரும் விழா நடைப்பெற்றது.முதல் விழாவாக ஆங்கில மன்றம்(ENGLISH CLUB) துவங்கப்பட்டது.இவ்விழாவிற்கு சிறப்புரையாற்ற முனைவர் T.புஷ்பநாதன் அவர்கள் ஆங்கிலத்தின் முக்கியத்துவத்தை பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.இரண்டாவது விழாவாக பனப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக உலக மக்கள் தொகை தின விழாவும் மற்றும் குடும்ப கட்டுப்பாட்டின் அவசியத்தை பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.இதில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் என அனைத்து பணியாளர்களும் கலந்துக்கொண்டனர்.மூன்றாவது நிகழ்வாக அறிவியல் மன்றம் துவங்கப்பட்டது.இதில் திரு R.பழனி பட்டதாரி ஆசிரியர் அவர்கள் மற்றும் சக அறிவியல்ஆசிரியர்கள் அனைவரும் அறிவியலின் முக்கியத்துவத்தை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.இந்த மூன்று விழாவிற்கும் தலைமையேற்று நடத்தி கொடுத்த தலைமையாசிரியருக்கும் நன்றியுரை வழங்கிய உதவி தலைமையாசிரியர் அவர்களுக்கும் ஆர்வம் காட்டிய மாணவர்களுக்கும் இதற்கெல்லாம் உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த நன்றி...













Monday, September 23, 2019

இன்று 07/09/19 நம் பள்ளியில் swatch pakhwada நிகழ்வின் ஒரு பகுதியாக பள்ளியின் மைதானம் மற்றும் சுற்றுப்புறத்தை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தூய்மை செய்தனர்..








இன்று 05/09/19 நம் பள்ளியில் ஆசிரியர் தின விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.காலையில் சர்வப்பள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது.மாலை நேரத்தில் ஆசிரியர்களுக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் போட்டிகள் நடத்தப்பட்டது.இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் திரு.அ.கமலக்கண்ணன் அவர்களும் பெண்கள் பிரிவில் திருமதி கே.எஸ்.சாந்தி அவர்களும் வெற்றிப் பெற்றனர்.பிறகு அனைவருக்கும் பனப்பாக்கம் சாருமதி கேஸ் ஏஜென்சி நிறுவனர் அவர்கள் பரிசுகள் வழங்கி ஆசிரியர்களை கௌரவித்தார்..ஆசிரியர் தின விழா தலைமையாசிரியர் தலைமையில் இனிதே நிறைவடைந்தது.. பிறகு விழாவின் இறுதியில் பாதுகாப்பான முறையில் எரிவாயுவினை பயன்படுத்துவதைப் பற்றி சாருமதி கேஸ் ஏஜென்சி சார்பாக செயல்முறை விளக்கம் விழிப்புணர்வு தரப்பட்டது....









Thursday, August 15, 2019

இன்று 15/08/19 வியாழக்கிழமை 73 வது சுதந்திர தின விழா கோலாகளமாக நடைப்பெற்றது.தலைமையாசிரியர் அவர்கள் மூவர்ண கொடியை ஏற்றி வைத்தார்,வரவேற்புரையை உதவி தலைமையாசிரியர் அவர்களும்,தலைமை உரையை தலைமையாசிரியர் அவர்களும்,முன்னிலை பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அவர்களும் ,சிறப்புரையை சக ஆசிரியர்களும் நன்றியரை பட்டதாரி உதவி தலைமையாசிரியர் அவர்களாலும் இந்நிகழ்வு இனிதே நடைப்பெற்றது.மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும்,பல்வேறு போட்டியில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.












இன்று 14/08/19 காலை வழிப்பாட்டு கூட்டத்தில் டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இந்நிகழ்வினை தலைமையாசிரியர் அவர்கள் துவங்கி வைக்க திரு.தமிழரசன் அவர்கள் இதனைப்பற்றி விளக்கினார்.உதவி தலைமையாசிரியர் அவர்கள் விழிப்புணர்வு ஊர்வலத்தை வழிநடத்தி சென்றார்..





Friday, August 9, 2019

இன்று 09/08/19 பனப்பாக்கம் லயன்ஸ் கிளப் சார்பில் சிகரம் தொடு என்ற நிகழ்ச்சியின் மூலம் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஊக்குவிப்பு பயிற்சி வழங்கப்பட்டது .இந்த விழாவினை தலைமையாசிரியர் அவர்கள் துவக்கி வைத்தும்,உதவி தலைமையாசிரியர் அவர்கள் நன்றியுறையும் வழங்கினார்...இந்த நிகழ்ச்சியை கருணாகரன் அவர்கள் தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது...





இன்று (08/08/19) தேசிய குடற் புழு நீக்க தினத்தையொட்டி தலைமையாசிரியர் மற்றும் உதவி தலைமையாசிரியர் அவர்கள் மாணவர்களுக்கு அல்பென்டசோல் வழங்கி விழிப்பணர்வு ஏற்படுத்தினர்.இதனைத்தொடர்ந்து வகுப்பாசிரியர்கள் அனைவரும் தங்களுடைய வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் மாத்திரை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதற்கான புகைப்படம்.....